பிரித்தானியாவின் ஷெபீல்ட் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 வயது சிறுமி உயிரிழந்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 15 வயதுடைய சம்மர் லீ செய்மர் என்னும் பெயருடைய 15 வயதான சிறுமி கடுமையான காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து காசல் வீதிச் சந்தி ஹேமார்க்கெட் பகுதியில் நேற்றுமாலை 5 மணியளவில் நடந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெற்கு யோர்க்க்ஷையர் பொலிசாருக்கு தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான 17 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment