மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா தொடர்பிலான கருத்தரங்கில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கதவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், பரிகார நீதிக்கான அனைத்துலக பொறிமுறை குறித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்ககத்தின் பிரதிநிதிகள் கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதிகளில் ஒருவருமான பேராசிரியர் இராமசாமி அவர்களது ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு நவ21ம் நாள் சனியனற்று இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், மேலவை உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து, தமிழக தோழமை மையத் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
மலேசியாவின் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் லிம் கிட் சியாங்க் உட்பட பல மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங்கெடுத்திருததோடு, தமிழீழத் தாயகத்தில் இருந்து வட மாகாண சபைப் பிரதிநிதிகள் அனந்தி சசிதரன், சிவாஜிலங்கம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.தமிழகத்தில் மதிமுகத் தலைவர் வைகோ, கொளத்துர் மணி ஆகியோரும் பங்கெடுத்துள்ளனர்.
அமைச்சர் மாணிக்கவாசர் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் என் கருப்பொருளில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கருத்துரையினை வழங்கியிருந்ததோடு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில்களை வழங்கியிருந்தார்.
இதேவேளை மேற்சபை உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து உள்ளக விசாரணையின் சவால்கள் குறித்தும், பரிகார நீதிக்கான அனைத்துலக பொறிமுறையின் அவசியம் குறித்தும் கருத்துரையினை வழங்கியிருந்தார்.









No comments:
Post a Comment