பரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற பல அதிரடி தாக்குதல்களை அரங்கேற்ற திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ் பிரதமர் மனுவேல் வோல்ஸ் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் மீது மட்டுமின்றி இதர ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகளால் இதுபோன்ற சதித்திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டதாகவும், தற்போதும் தீட்டப்பட்டு வருவதாகவும் அரசுக்கு நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் வந்துள்ளன.
தீவிரவாத அச்சுறுத்தலுடன் நீண்டகாலத்துக்கு பிரான்ஸ் வாழவேண்டியுள்ளது என அந்த தகவல்களின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறிப்பாக இளம்வயதினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்வயதினர் இந்த தாக்குதலில் பலியானதை அறிந்து மிகுந்த வேதனையாக உள்ளது என மனுவேல் வோல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment