தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்புகுமார குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment