November 02, 2015

வெளிக்காரணி காரணமாகவே' விபத்து ஏற்பட்டது:மெட்ரோஜெட்

சைனாய் தீபகற்பத்தில் தமது விமானம் விழுந்து நொறுங்கி பேரழிவுக்குள்ளானதற்கு 'வெளிப்புற காரணிகள்' மட்டுமே காரணம் என மெட்ரோஜெட் விமான நிறுவனம் கூறியுள்ளது.

விபத்துக்குள்ளான அந்த ரஷ்ய விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோஜெட்டின் துணை இயக்குநர் அலெக்சாண்டர் ஸ்மிர்நோவ், தொழில்நுட்பக் காரணங்களினால் விமானம் விபத்துக்குள்ளானது என்பதை நிராகரித்தார்.

வெளிக்காரணியின் தாக்கத்தின் காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியது என்பது மட்டுமே இதற்கு விளக்கமாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விபத்து குறித்து ஊகிப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடினின் பேச்சாளர், எனினும் எந்தக் கருத்தும் புறந்தள்ளப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த140க்கும் அதிகமானவர்களின் சடலங்கள் புனித பீட்டர்ஸ்பர்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment