வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை அரும்புகள் நிறுவனம் வழங்கியது.
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 176 குடும்பங்களுக்கு 16.11.2015 அன்று அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி புரிந்துள்ளது, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் இணை நிறவனமான "அரும்புகள்" சமூக அபிவிருத்தி நிறுவனம்.
வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு பெருமளவிலான மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திரு முருகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி கிராமசேவகர் பிரிவில் உள்ள 52 குடும்பங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டம் பொன்னகர் கிராமசேவகர் பிரிவில் உள்ள 124 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி புரிந்துள்ளது, அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம்
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கூலித்தொழில் செய்கின்ற குடும்பங்கள் வாழ்வதோடு போரினால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசங்களை அண்டிய மற்றைய பிரதேசங்களிலும் இன்னும் பலநூறு குடும்பங்கள் உதவிகளுக்காக காத்திருக்கின்றனர். உதவிகள் செய்யக் காத்திருக்கும் உறவுகள் குறித்த இம்மக்களுக்கு உதவிகள் செய்யுமாறு அன்போடு வேண்டப்படுகின்றனர்.












No comments:
Post a Comment