November 04, 2015

தெற்கு சூடானில் விமானம் வீழ்ந்ததில் 40 பேர் பலி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் ஒன்று தெற்கு சுடானின் தலைநகர் ஜுபாவில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய உடனேயே வீழ்ந்து நொறுங்கியுள்ளது

40க்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பலர் தரையில் இருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

நைல் நதியில் கிழக்கு கரையில் இந்த விமானம் வீழ்ந்துள்ளது.

உயிர் தப்பியவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன.




No comments:

Post a Comment