November 26, 2015

இணுவில் அண்ணா சனசமூகநிலையத்திற்க அண்மையாக பொலிஸ் என கூறிக்கொண்டு சமூகவிரோதிகள் குடிபோதையில் அட்டகாசம்

இணுவில்  அண்ணா சனசமூகநிலையத்திற்க அண்மையாக காவற்துறையென கூறிக்கொண்டு சில  சமூகவிரோதிகள்  குடிபோதையில் அட்டகாசம்.


22.11.2015  இரவு 9 மணிக்கு போதையில் இருந்த காவாலிகள் இணுவில் அண்ணா சனசமூகநிலையத்திற்கு அண்மையாக உள்ள வீடு ஒன்றில் புகுந்து பெண்களை தாக்கியும், வீட்டை அடித்து உடைத்தும், பெண்கள் அணிந்து இருந்த தாலிக் கொடி சங்கிலி, காப்பு என்பவற்றை சூரையாடி சென்றுள்ளனர்.

இதில் நிறைமாத கற்பினி ரி. தனுயா வயது28, ஜென்சி வயது10 , டில்லிராணி வயது53 படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  நோர்வேயை சேர்ந்த சிறி,சி.ஜெந்தன்,கனிஸ்ரன், என்பவர்கள் தொடர்பாக சுண்ணாக பொலிஸிலும், யாழ் வைத்திய சாலைப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment