October 29, 2015

TalkTalk நிறுவனத்தை கதிகலங்க செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்

பிரித்தானியாவின் பிரபல தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான TalkTalk நிறுவனத்தின் வாடிக்கையாளர் தகவல்கள், கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் என்பன அண்மையில் ஹேக் செய்யப்பட்டிருந்தன. 

அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த இச் சம்பவத்தின் பின்னணியில் அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

குறித்த சைபர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சைபர் குற்றங்களுக்கு பொறுப்பான Metropolitan பொலிஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனே சைபர் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது அச்சிறுவன் வேறு சிலருடன் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நம்புகின்றனர்.

No comments:

Post a Comment