புலி திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே இப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனத்தை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி மேலும் படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் மிகவும் ரசிக்கும் படியாகவும், படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது.
படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது, அவரின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அது மட்டுமின்றி ஹொலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது.
குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ‘Hats Off to the Puli Team’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

No comments:
Post a Comment