ஹானா நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் கணேசராசன் சதீசன் அவர்களின் நிதி உதவியுடன் அவரின் ஐந்தாவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர்களின் நிதி உதவியுடன் 21.10.2015 மயிலம்பாவெளில் உள்ள வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் காரியாலயத்தில் வைத்து ஆறுமுகத்தான் குடியிருப்பு ,கோப்பாவெளி ,சவுக்கடி ,மற்றும் மயிலம்பாவெளி ஆகிய கிராமங்களில்
வாழ்வாதரமிழந்து குடும்ப சுமைகளை கொண்ட ஆறு குடும்ப பொறுப்புள்ள விதவை தாய்மார்களுக்காக கோழி குஞ்சுகளும் ,அதற்கான கூடுகளும் வழங்கி வைக்க பட்டுள்ளதோடு மிகவும் வறுமை நிலைமையில் குடிசையில் வாழ்ந்த
ஒரு குடும்பதிற்க்கு புதிய குடிசையும் அமைத்து கொடுக்கப்பட்டதோடு பாலர் பாடசாலை ஒன்றுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இவ் உதவி வழங்கும் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் சார்பில் கிராம சேவகர் ,சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம பொருளாதார உத்தியோகத்தர் , வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தொண்டர்கள் கிராம தலைவர்கள், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.








No comments:
Post a Comment