October 17, 2015

எழும்ம்புக்கூடுகள் மீட்க்கப்பட்ட இடத்தில் நீதவான்,தடயவியல் நிபுணர்கள்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் மீட்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவற்துறையும்  தடவியியல் நிபுணர்களும் நீதவானும் சோதனைகளை மேற்கொண்டள்ளனர்.

அரியாலைப் பகுதிக்குச் சென்றிருந்த பொது மக்களால்  அங்கு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் செருப்பு குடை பேர்ஸ் உள்ளிட்ட பொருட்டகளும் எலுமபுக் கூடுகளும் இருப்பதனைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அப் பகுதி மக்களால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் சம்வம் தொடர்பாக அங்கு சென்றிருந்த கூட்டமைப்பினள் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென்று பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டிருந்தார்.

இன்று அந்த இடத்திற்கு சமூகம் தந்த யாழ் நீதவான் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தார்.

இதற்கமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அத்தோடு தடவியில் நிபுனர்களும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் ஆரம்பித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment