இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொன்சேகாவுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை வழங்க முயற்சித்தார் என்றும் அது கைகூடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே பாதுகாப்புச் செயலாளர் பதவியை சரத்பொன்சேகாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment