தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். அவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்ததைப் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment