தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஈழத் தமிழரான மோகன் என்பவரிடம் விசாரணை முடிந்தபிறகு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்ததாகவும் அதன்பிறகு நள்ளிரவில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதின் விளைவாகத்தான் அவர் இறந்தார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தகுந்த விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன்.
No comments:
Post a Comment