September 26, 2015

தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு

ஈழத்தமிழ் தேசத்தின் விடிவிற்காய் ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை துறந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 28வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பல்கலை கழகத்திற்குள் நினைவு கூரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை பல்கலைக்கழகத்தில் கூடிய மாணவர்கள் சிலர் திலீபனின் நினைவுப்படத்தை குறிப்பிட்டதொரு இடத்தில் வைத்து அதற்கு மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment