September 01, 2015

இலங்கையை 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

தொடக்க வீரர் கவுசல் சில்வா, 24 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மேத்யூஸ் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

தோல்வியை தவிர்க்க மேலும் 318 ஓட்டங்கள் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உமேஷ்யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். சில்வா 27 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.

5வது விக்கெட்டுக்கு மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்தார்.  அவரும் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய பெரரா அரைசதம் கடந்து 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் சதம் கடந்து 110 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 85 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

No comments:

Post a Comment