2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரக்பி போட்டிகளின் அறிமுக விழாவில் இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டுக்கான உலகக் கிண்ண ரக்பி அறிமுக நிகழ்வு நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மாலை மத்திய லண்டனில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் முக்கிய பிரமுகர்களாக, இளவரசர் ஹரி, அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரன் மற்றும் ரக்பி சங்கத்தின் தலைவரும், சிறந்த ரக்பி வீரருமான ஜசொன் வியோனல்ட் ஆகியோர் பற்குபற்றினர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய இளவரசர் ஹரி, இம்முறை நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் மிகவும் சிறந்த முறையில் இடம்பெறும். திறமையான வீரர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ள இப்போட்டி அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.
மேலும், எதிர்வரும் நாட்கள் ரக்பி ரசிகர்களுக்கான நாட்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு டேவிட் கமரூன் கருத்து தெரிவிக்கும்பொழுது, இந்த அறிமுக நிகழ்வு இங்கிலாந்துக்கு ஒரு பெருமையை தேடித் தரும் நிகழ்வாக உள்ளது.
நாங்கள் ஒலிம்பிக், பராலிம்பிக் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மெய்வள்ளுனர் போட்டிகள் என்பவற்றை மிகவும் சிறந்ந முறையில் நடத்தி வெற்றி கண்டோம். அதேபோன்று இங்கிலாந்தின் சொந்த விளையாட்டான ரக்பி போட்டிகளையும் இம்மறை சிறப்பாக நடத்துவோம் என்று கூறினார்.
உலகக் கிண்ண ரக்பி 2015 போட்டிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய லண்டனில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment