இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் பதவியிலிருந்து மார்வன் அத்தபத்து விலகியுள்ளார்.
மாவன் அத்தப்பத்துவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த போல் பாப்ரேஸ் கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்தப் பொறுப்பு மாவன் அத்தபத்துவிற்கு வழங்கப்பட்டது.
அப்போது அவர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
மாவன் அத்தபத்து தலைமை பயிற்றுநராக கடந்த வருடம் செப்டம்பர் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment