இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த குமார் சங்ககரா இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்தின் கவுன்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.
ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் சர்ரே அணி நாட்டிங்காம்ஷைர் அணியுடன் மோதியது. இதில் சர்ரே அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவியஸ் 4 ரன்னிலும், போயகேஸ் 42 ரன்னிலும் அவுட் ஆனார்.
சங்ககரா 3-வது நபராக களம் இறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 138 பந்தில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 166 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் சர்ரே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது.
No comments:
Post a Comment