ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைந்துள்ள ஒரு லட்சத்து அறுபதாயிரம் அகதிகளை பல்வேறு நாடுகளும் ஏற்பதற்கான சர்ச்சைக்குரிய பிரேரணைகளை இறுதி செய்வதற்காக ஐரோப்பிய ஆணையம் இன்று கூடுகிறது.
வந்துள்ள அகதிகளில் பலர் சிரியாவிலிருந்து வெளியேறியவர்கள்.
அண்மையில் இத்தாலி, கிரேக்கம், ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு வந்துள்ள அகதிகளை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது அபராதம் விதிப்பதற்கு ஆணையம் திட்டமிடுகிறது.
திங்களன்று கிரேக்கத் தீவான லெஸ்போஸில் குவிந்த மேலும் இருபத்தையாயிரம் பேரைச் சமாளிக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் கப்பல்களை கிரேக்க அரசாங்கமும் ஐநா அகதிகள் உதவி அமைப்பும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளன.
இதனிடையே செர்பியாவுடனான ஹங்கேரி எல்லையில் வசதிகளற்ற தடுப்பு முகாம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் இரவைக் கழித்துள்ளனர்.
இதேவேளை, வருடத்துக்கு ஐந்து லட்சம் அகதிகள் வரையிலானவர்களுக்கு ஜெர்மனியால் அடைக்கலம் தர முடியும் என ஜெர்மனியின் துணை ஆட்சித் தலைவர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment