September 16, 2015

இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்- ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்!

இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பன்னாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றபோதே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment