September 27, 2015

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம்-சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் இதனை கண்டித்துள்ளன.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை கண்டித்தும், இலங்கை மீது வெளிப்படையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,

இலங்கை அரசின் போர் குற்றங்கள் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால், நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு விசாரணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், தடா.சந்திரசேகரன், ராவணன், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, ஏழுமலை, ரமேஷ், ராஜேந்திரன், சஞ்சீவிநாதன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 




No comments:

Post a Comment