பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் தெரிவித்துள்ளார்.
அவரது வலது கையிலும் வலது காலிலும் சிறிதளவு தசைப் பிடிப்பு காணப்படுவதாகவும், அவருக்கு வழங்கப்படும் பிசியோதெரப்பிக்கு அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருவதாகவும் டாக்டர் பெண்டன் ஜியாப் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர், அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் எனக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment