September 17, 2015

மகிந்த போர்க்குற்றவாளியானால் தண்டிக்கப்படுவார் : ராஜித சேனாரத்ன

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால், தண்டனை அனுபவித்தே ஆகவேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் மாறப்போவதில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மட்டுமன்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் போர்க் குற்றம் குறித்து நீதிமன்றில் சாட்சியமளிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய உள்ளக விசாரணை நடத்தப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதே தவிர, சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்காதென ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment