September 26, 2015

யாழ்.மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிக மோசமாக சீர்கெட்டு பொதுமக்கள் வீதிகளில் இறங்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது

யாழ்.மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிக மோசமாக சீர்கெட்டு பொதுமக்கள் வீதிகளில் இறங்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சமூகவிரோதிகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிக மோசமாக சீர்கெட்டு பொதுமக்கள் வீதிகளில் இறங்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது

சுமூகவிரோதிகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் திறமையின்மையே வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெருகும் வன்முறைகளுக்கு அங்கு கடமையாற்றும் பொலிஸாரின் திறமையின்மையே காரணம் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டிக்காட்டி கடும் விசனம் வெளியிட்டிருந்தமையே பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பொலிஸாரின் செயற்பாட்டில் நம்பிக்கையின்மையே அந்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரைக் களமிறக்கி சமூகவிரோதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு வித்திட்டது என வும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அடங்கிக் கிடந்த ரவுடிக் கும்பல்கள் மீண்டும் குடாநாட்டின் பல பகுதிகளிலும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளதை சுட்டிக்காட்டும் மக்கள், பொலிஸார் சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்டி இத்தகைய ரவுடிகளை அடக்க உருப்படியான நடவடிக்கை எடுக்காமையே அவர்களின் கொட்டங்களுக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகத்தில் பட்டப் பகலில் நடு வீதிகளில் கூட பயங்கர ஆயதங்களுடன் நின்று ரவுடிகள் ட்டகாசம் செய்யும் நிலை போன்று மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் இதுவரை இருந்ததில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அண்மைய சில நாட்களில் மட்டும் பல மோசமாக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. யாழ்.நகரில் வைத்து சமூக விரோத ரவுடிக் கும்பலால் ஆசரியர்களான கணவன், மனைவி கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இதில் காயமடைந்த கணவன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை மரணமானார். மனைவி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோன்று கொக்குவில் பகுதியில் கடந்த செய்வாய்க்கிழமை மாலை இளைஞர் ஒருவரை ரவுடிக் கும்பல் ஒன்று பலர் பார்த்திருக்க நட்டநடு வீதியில் துரத்தித்துரத்தி வெட்டியுள்ளது. அதில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேநாளின் வேலணையில் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கணவனைத் தாக்கிவிட்டு இளம் 21 வயதான அவரது மனைவியை தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். புpன்னர் அவரை கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய அவர்கள் முயன்றபோது அப்பெண் சாதுரியமாகத் தப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தி;ல் கட்டுக்கடங்காமல் தொடரும் வன்முறைகளுக்கு கடந்த சில நாட்களில் நடந்த இவ்வாறான சல சம்பவங்களே சிறந்த உதாரணமாகும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மது மற்றும் போதைப் பொருட்களின் பாவனையால் வன்முறைகள் அதிகரிப்பதாக பொலிஸார் கூறி தமது திறமையின்மையi சாதாரமாக மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டும் அவர்கள், மது பாவைனையை கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

உரிய விதிமுறைகளைப் பேணாத பெருமளவு மது விற்பனை நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக மதுவரித் திணைக்களத்துக்கு ஆதாரங்களுடன் புகார் செய்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடந்த வாரம் மாவட்ட அரசாங்க அதிபர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தமையையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு உரிய அனுமதி பெறாமலும் பெருமளவு மது விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. ஆதனைவிட சட்டரீதியாக அனுமதி வழங்க முடியாத பகுதிகளாக பாடசாலைகள், பேருந்து நிலையங்கள், மத வழிபாடடுத் தலங்களுக்கு மிக அருகில் கூட மது விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அரசு இயந்திரமும் பொலிஸாருமே சட்டத்தை மீறி இவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்கின்றனர்.

இது திட்டமிட்டு வன்முறைகளை தூண்டிவிட்டு சமூகத்தைச் சீரழிக்கும் செயற்பாடே எனச் சந்தேகிக்கவேண்டியுள்ளதாகவும் பொது மக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஏனவே, சாக்குப்போக்குக் கூறி சமாளிக்காமல் சட்டம் தன் கடமையை சரியாக் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களின் நின்மதியான, சாதாரண வாழ்வுக்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிக மோசமாக சீர்கெட்டு பொதுமக்கள் வீதிகளில் இறங்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment