யாழ் மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் இடப்பெயர்ந்ததாக கூறப்பட்ட 5000 ற்கு மேற்பட்டோர் இன்னும் 41 முகாம்களில் வாழ்வதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
1990 ம் ஆண்டிலிருந்து இம்முகாம்கள் இயங்கி வருவதாக இயக்கத்தின் தலைவர் ஹேர்மன் குமார தெரிவித்துள்ளார்.
இங்கு 5863 பேரை உள்ளடக்கிய 1536 குடும்பங்கள் இருப்பதாகவும், இவற்றில் 351 குடும்பங்கள் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளி உலகத்தோடு எவ்வித இணைப்பு இல்லாமல் 25 வருடங்களுக்கு மேலாக, பாதுகாப்பற்ற சூழ்நிலையில், போர் அகதிகளாக இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் போதுமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற குறைந்தபட்ச வசதிகளுடன் அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள் இவர்கள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இதற்கான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் மீள குடியேற்றப்படுவதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கான தகுந்த சந்தர்ப்பத்தினை புதிய அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment