September 16, 2015

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்- தமிழக அரசு சீமான் வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவையென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது  தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாம்கட்சி தலைமை ஒருகினைப்பாளர் வரவேற்றுள்ளார் 

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும்,  சர்வதேச விசாரணையை ஐ.நா மனித உரிமை பேரவை கொண்டு வர வலியுறுத்த வேண்டுமெனவும், விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தீர்மானம் மேற்ககொள்ள வேண்டுமெனவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா மீது பொருளாதார தடை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், பொது வாக்கெடுப்பு நடத்துமாறு கோரி 2013 ஆம் ஆண்டு பேரவையில் தீர்மானம்  கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment