தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப் பயணம் கடந்த இரண்டு நாட்களாக Basel நகரில் இருந்து சொல்த்தூண் நகரத்தையும் அதை தொடர்ந்து அங்கு இருந்து அவாஞ் நகருக்கு 135 Km தூரத்தை கடந்து வந்தடைந்தனர்.
எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள இருக்கும் வேளையில் மதியம் 14 மணிக்கு மனிதநேய ஈருருளிப் பயணம் ஜெனீவாவுக்கு வந்தடையும்.
தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கவென ஐ.நா அலுவலகம் நோக்கி ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் எமது சகோதர்களுக்கு, ஐரோப்பிய வாழ் தமிழுறவுகள் யாவரும் உறுதுணையாக இணைந்து நடைபெறவிருக்கும் பேரணியை வெற்றிபெற வைக்க வேண்டும்.காலத்தின் தேவை கருதி அணிதிரளுமாறு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment