September 25, 2015

இணையதளத்தில் வெளியாகிறது குற்றம் கடிதல்: சினிமா உலகில் புதிய சாதனை

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் திரைப்படம் நேற்று தமிழகமெங்கும் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் குற்றம் கடிதல் படம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் மகிழ்விக்க ஆன்லைனில் வெளியாக இருக்கிறது.

இது பற்றி ஹீரோடாக்கீஸ்.காம் நிறுவன அறிக்கையில், தமிழ் சினிமா படங்களை இணையதளத்தில் நல்ல தரத்தில், குறைந்த விலையில், மேலும் 5.1. சரவுண்டிங்கில் விற்பனை செய்து வருகின்றோம்.அந்த வகையில் தற்போது குற்றம் கடிதல் படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. 

லிங்கா, உத்தம வில்லன், பாபநாசம், என்னை அறிந்தால், மாரி, மாஸ் போன்ற படங்களை அடுத்து தற்போதுகுற்றம் கடிதல் படம் வெளியாகி 4 வது நாளில் இணையதளத்திலும் வெளியாகவுள்ளது.இந்த முறை திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கம் (Download) செய்து பார்க்கும் பழக்கத்திற்கும் முடிவுக்கு வரும் நம்பிக்கையோடு சொல்லலாம்.

No comments:

Post a Comment