கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் காணாமல்போயிருந்த 5 வயது சிறுமியின் சடலம், திவுலப்பிட்டிய அகரங்கஹ பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த வேளை, வீட்டில் குறித்த சிறுமியின் பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் இருந்துள்ளதாகவும் வீட்டின் ஜன்னலின் ஊடாக சிறுமி கடத்திச்செல்லப்பட்டுள்ளார் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment