பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றது.
அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சேயா மற்றும் வித்தியா படுகொலைச் சூத்திரதாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சட்டத்தரணிகளே மரணம் மௌனித்து விட்டதா, 'நேற்று வித்தியா இன்று சேயா. நாளை யார்?', அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களைக் கண்டிக்கின்றோம். வித்தியா சேயாவிற்கு நீதி வேண்டும்' என எழுதப்பட்ட வாசகங்களை அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட்டனர்.
வவுணதீவுப் பிரதேச விசேட தேவையுடையோரின் அமைப்பான 'வாழ்வகம்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனுக்கான மகஜரை கணக்காளர் கே. ஜெகதீஸ்வரனிடம் கையளித்தனர்.

No comments:
Post a Comment