August 22, 2015

செப்டம்பர் 21ல் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்-சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

இலங்கை படையினருக்கு தண்டனை வழங்குமாறும், வடக்கு கிழக்கு தொடர்பாக சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. சுவிற்ஸர்லாந்து காவற்துறையினர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டுக்குழு ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்புகளை அனுப்பியுள்ளது. 

6 மணிநேரம் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரான்ஸில் இருந்து சென்று கலந்து கொள்ள உள்ளவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மூவரடங்கிய ஐ.நா குழுவின் அறிக்கையும் செப்டம்பர் 21ம் திகதி வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment