August 15, 2015

யாழ்.பல்கலைக்கழக உத்தியோக பூர்வ அறிக்கை

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், முகாமைத்துவ பீடத் தலைவர், விவசாய பீடத் தலைவர் மற்றும் மருத்துவ பீட செயலாளர் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளிவந்துள்ள அறிக்கையே யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முழுமையானதும் உத்தியோகபூர்வமானதுமான அறிக்கை. அறிக்கையின் சில பகுதிகள் கீழே. 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 17.08.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் கட்சி சார்பான அறிக்கைகள் எவையும் இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த சில தினங்களாக பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் மாணவர் ஒன்றியத்தின் பெயரைப் பயன்யடுத்திய அறிக்கைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதோடு அதை சில கட்சிகள் தமக்குச் சார்பான தேர்தல் பரப்புரைகளுக்காக பயன் படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை இருந்து வந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களைப் போல் எப்பொழுதும் தனித்துவமானதும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தியதுமான பக்கச்சார்பற்ற செயற்பாடுகளையே எமது ஒன்றியமும் முன்னெடுத்து வருகின்றது.

எனவே நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான போலியான அறிக்கை பரப்புரைகளை நம்பி மக்கள் குழப்பமடைய தேவையில்லை. கடந்த கால வரலாறுகளை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியத்தின் நலனை முன்னிறுத்தி தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து மக்களின் ஆணையை முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வாக்களித்தல் என்பது எமது சனநாயக உரிமையாகும். அவ் உரிமையினை தமிழ் மக்களாகிய நாம் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் எவரும் அரசியல் கட்சி சார்பானவர்களாகவும் தமது தனிப்பட்ட நலன்களிற்காக மாணவர் ஒன்றியத்தின் பெயரைப் பயன்படுத்துவதுபவர்களாகவும் இருப்பது ஒன்றியத்தின் இதுவரை கால பாரம்பரியத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவே அமையும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.




No comments:

Post a Comment