பொதுத் தேர்தலையும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளையும் நம்பக தன்மையுடன் நடாத்துமாறு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்கும் வகையில் மால்டா நாட்டின் முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் அபேலா தலைமையில் பொதுநலவாய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கென பொதுநலவாய செயலாளர் நாயகத்தினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
போதுநலவாய அமைப்பு இலங்கையின் தேர்தல்களின் போது வலுவான ஆதரவு வழங்கி வரும் நிலையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க அழைப்பு விடுத்துள்ளமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என செயலாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை நாடு நம்பகமான தேர்தலை மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்களை தொடர்தும் பேணும் என்றும் தேர்தல் காலங்களிலும், தேர்தல் தினத்திலும் மற்றும் தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியிலும் நாட்டின் தேர்தல் சட்டங்களை பின்பற்றும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment