இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் மோயின் கான் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அத்துடன் பிணைக் கைதிகளை பிடித்து வைத்த நிலையில் உஸ்மான், காசிம் கான் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் முகமது நவேத் என்ற தீவிரவாதியும் பரிதாபமாக சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஃபைசாலாபாத்தில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்பு சக தீவிரவாதி மோயின் கானுடன் வந்ததாகவும், இந்துக்களை கொல்வதற்காகவே இருவரும் வந்ததாகவும் தெரிவித்துள்ளான். முதலில் தனக்கு 20 வயது என்றும், பின்னர், 16வயது என்றும் மாற்றி மாற்றி விசாரணையில் தெரிவித்துள்ளான். இந்தியாவில் சிறுவர்களுக்கான தண்டனை மற்றும் சட்ட நடைமுறைகளை அறிந்துள்ள லஷ்கர் தீவிரவாதிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களைத் தேர்தெடுத்து பயிற்சியளித்து தாக்குதலுக்காக இந்தியாவுக்குள் அனுப்பி வருகின்றனர். மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபிற்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி இவன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment