August 19, 2015

சாதனை படைக்கப்போகும் பிரித்தானிய மகாராணி

இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.


இங்கிலாந்து ராணியாக பதவி வகிக்கும் எலிசபெத் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி ஆறாம் திகதி அரசியாகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 25. தற்போது அவருக்கு 89 வயதாகிறது. இந்நிலையில் கடந்த 63 ஆண்டுகளாக இவர் ராணியாக பதவி வகித்து வருகிறார்.


மூன்று தலைமுறைக்கு முந்தைய இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி, 63 ஆண்டுகள் அரசியாக இருந்துள்ளார். தற்பொழுது எலிசபெத்தும் விக்டோரியா மகாராணி பதவி வகித்த காலமே பதவி வகிக்கின்றார்.


இந்நிலையிலே அதிக காலம் ராணியாகப் பதவி வகித்தவர் என்ற சாதனையை இன்னும் சில நாட்களில் இரண்டாம் எலிசபெத் தனதாக்ககிக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment