August 01, 2015

தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய வித்தியானந்தா மாணவர்கள் கௌரவிப்பு

வடமாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டி தேசிய மட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள 15 வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 

நிகழ்வில் முல்லைத்தீவு கல்வி வலய உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் மைக்கல் திலகராஜா, முகாமைத்துவ பிரதிக்கல்விப் பணிப்பாளர் காண்டீபன், வித்தியா தீபம் சுவிஸ் கிளையின் நிர்வாக உறுப்பினர் கு.சித்திரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர், பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் சூட்டியதுடன் சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

சிறப்புப் பரிசாக 15 வீரர்களுக்கும் கல்லூரியின் பழைய மாணவனாகிய சுவிஸ் நாட்டில் வசிக்கும் குமாரையா சித்திரவேல் என்பவரால் அவரது மறைந்த பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக விளையாட்டு உடைகள் வழங்கப்பட்டன.        

No comments:

Post a Comment