மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்து வேட்டை,மைத்திரியின் கடிதத்துக்கு மஹிந்த தரப்பு பதிலடி. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க கோரி கையெழுத்துக்களை திரட்டும் பணியில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டினால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகும் படி அழுத்தம் தெரிவிக்கும் முகமாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கையொப்பங்களை திரட்டும் பணியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளது.
அதேவேளை கையொப்பமிட மறுக்கும் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் வழங்க வேண்டாமென பகிரங்கமாக கோரப்படவுள்ளது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய அவசர கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தில் ஐ.மா.சு.மு. பொது தேர்தலில் வெற்றியீட்டினால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரை பிரதமராக்கும் தமது திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment