August 06, 2015

யாழில் கல்வியங்காடு பகுதியில் மாவை பிரச்சாரம்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா இன்று காலை யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப் பிரச்சார நடவடிக்கைகளை கல்வியங்காட்டு சந்தைப்பகுதியிலேயே தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற பிரச்சார நடவடிக்கையில் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment