August 10, 2015

மீண்டும் விடுதலை புலிகள் தலை தூக்கும் அபாயமாம்!- பிரபல சோதிடர் ஆரூடம்

பயங்கரவாதத்துடன் போராடக்கூடிய, சர்வதேசத்திற்கு அஞ்சாத தலைவரை நியமிக்கவில்லை என்றால் எதிர்வரும் சில வருடங்களினுள் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்கும் என பிரபல சோதிடர் மஞ்சுல பிரீஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளிடம் இருந்து இந்நாட்டை காப்பாற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ச அன்று மேற்கொண்ட தீர்மானம் மிக பயங்கரமானதென சுட்டிக்காட்டியவர், இந்நாட்டு மக்கள் குறித்த தீர்மானத்திற்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச இந்நாட்டில் யுத்தத்தை நிறைவு செய்தமையினால் சர்வதேச சமூகங்கள் எங்களுடன் கோபத்துடனே செயற்படுவதாகவும், இத்தேர்தலின் மூலம் அவர்களுடன் போராடக்கூடிய தலைவரை நியமிக்கவில்லை என்றால் நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் கூறியுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில்  ராஜபக்ச மகத்தான வெற்றி பெற்றுக்கொள்ள் வேண்டும் எனவும், எதிர்வரும் சில வருடங்களில்  மைத்திரிபால சிறிசேன மற்றும்  ராஜபக்சவும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என தான் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் சோதிடர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment