August 11, 2015

சுரேசின் குழு மீது சித்தார்தனின் குழு தாக்குதல்….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர் ஒருவர் மீது சித்தார்த்தனின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், நீர்வேலி, கரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 26) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அக்கூட்டம் முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் மீது, வாழைத் தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த இனந்தெரியாத நபர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டம் இடம்பெற்ற பகுதியில் சித்தார்த்தனின் ஆதரவாளர்கள் சிலர் நின்றதாகவும் பின்னர் அவர்களே தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு தாங்களே அடிபட்டு குத்துப்படும் இவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்கள் என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவி்த்துள்ளனர்,


தொடர்புடைய செய்தி

சுரேஸ் ஆதரவாளர் மீது கடும் தாக்குதல்



No comments:

Post a Comment