தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திங்கட்கிழமையன்று ஒரு இந்துக் கோவிலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல், நாட்டில் நடந்ததிலேயே மிக மோசமான சம்பவம் என அந்நாட்டுப் பிரதமர் ப்ரயுத் சனோசா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கோவிலுக்குள் ஒரு பையுடன் சென்ற சந்தேக நபர் ஒருவர், பின்னர் அந்த பை இல்லாமல் வெளியே வந்தது, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக பிரதமர் ப்ரயுத் சானோசா கூறியுள்ளார்.
பிற ஆசிய நாடுகளிலிருந்து வந்த ஒன்பது வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை யார் நடத்தியது என்ற விசாரணையில், எந்தக் குழுவையும் புறந்தள்ளப்போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ ஆட்சியின் எதிர்ப்பாளர்கல், சீனாவிற்கு நாடு கடத்தப்படுவதில் ஆத்திரமடைந்திருக்கும் உய்குர் பழங்குடியினர் உள்ளிட்ட பலரும் சந்தேக வட்டத்தில் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தாய்லாந்தின் நாணயமான பாட் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டுள்ளது.

No comments:
Post a Comment