கைக்குண்டுகள் சில மற்றும் கத்திகள் இரண்டுடன் சப்ரகமுவ மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச்சேர்ந்த பிரபல அரசியல்வாதியொருவரின் தேர்தல் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் எட்டுபேரை கைதுசெய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். ரம்புக்கனை பன்னம்பிட்டியவில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்த எட்டுபேரில் இராணுவத்தைச்சேர்ந்த நபரொருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த அரசியல்வாதியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அச்சுறுத்துவதற்கும் அவருடைய வீட்டுக்கு சேதங்களை ஏற்படுத்துவதற்காகவும் இந்த குழுவினர் பயணித்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

No comments:
Post a Comment