August 29, 2015

சர்வதேச விசாரணைக் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா

ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நிறைவடைந்து அதன் அறிக்கை அடுத்த மாதம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பட்டிலேயே பிரித்தானியா தொடர்ந்தும் இருக்கிறது.

அதேநேரம் மறுசீரமைப்பு மற்றும் மனித உரமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதற்காக இந்த  சுட்டிக்காட்டப்படும் பரிந்துரைகளையும் சிறிலங்கா அரசாங்கம் அமுலாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment