நடைபெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சைகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சாத்திகள் அனைவரும், பரீட்சைகளுக்கு அமரும்போது அதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை கட்டாயம் பேணவேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:
Post a Comment