நுகேகொடை – மிரிஹான பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய வான் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் போலி இலக்கமுடைய வெள்ளை வான் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதில் சிவில் உடையில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தாங்கள் இராணுவ மேஜர் ஜெனரலின் பாதுகாப்பாளர் எனவும், துப்பாக்கியும் அவருக்கு சொந்தமானதென விசாரணைகளின் போது குறித்த மூன்று இராணுவத்தினரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். இராணுவத்தினர் தவறு செய்திருந்தமை உறுதியானால், இராணுவ சட்டத்திற்கமைய பாரபட்சம் பாராமல் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment