July 21, 2015

மகிந்தவையும் விரட்டும் வெள்ளை வான்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மிரிஹான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான போலி இலக்கமுடைய வெள்ளை வான் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேருடன் மேஜர் ஜெரால் பிரசன்ன சில்வாவுக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்றினையும் மிரிஹான பொலிஸார் நேற்று இரவு கைப்பற்றியுள்ளனர். 

இது தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. 

மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச வசிக்கும் மிரிஹான பிரதேசத்தில் வெள்ளை வான் கைப்பற்றியது மற்றும் அவ்விசாரணைகளை வேறு திசைக்கு திருப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment