July 05, 2015

வ/ புளியங்குளம் இந்துக்கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா

வ/ புளியங்குளம் இந்துக்கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா கல்லூரியின் அதிபர் திருமதி தே.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.

முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், ஈ.ஜெயதிலக ஆகியோரும், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஸ்ரீஸ்கந்தராஜா, பாடசாலை சமுகத்தினரும் கலந்துகொண்டனர்.











எஸ்.செல்வதீபன்


No comments:

Post a Comment