இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் பரமசாமி ஜோன்சன் அவர்களினால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கை.
இன்று மாரடைப்பு காணமாக உயிர்நீத்த இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களை பெருமைப்படுத்தும்விதமாக இந்தியாவின் ஜனாதிபதியாகவும், தமிழர்களின் அறிவியல் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக விஞ்ஞானியாகவும் இருந்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்திருந்தார்.
அவர் வாழும்காலத்தில் இளைஞர்களை தனது ஊக்குவிக்கும் பேச்சுக்கள் ஊடாக சிறந்த மனிதர்களாக மாற்றி வந்தது சிறப்பு அம்சம் ஆகும். அன்னாரின் மறைவால் நல்லதொரு வழிகாட்டியை எமது தமிழ் சமூகம் இழந்து நிற்கின்றது.
அவர் பதவிக்கு ஆசைப்படாமல் இருந்தும் அவரின் உண்மைத்தன்மையால் தான் நாட்டின் ஜனாதிபதி எனும் அந்தஸ்துஅவரைத்தேடி வந்தது அவர் தனது வாழ்நாளில் சிறந்த மனிதராக இறுதிவரை வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.
ஆகவே ஒவ்வொரு இளம்சந்ததியும் அவர் உங்களுக்கு காட்டிய நல்ல செயல்களை முன்உதாரணமாக எடுத்து செயல்படுவதே நீங்கள் அவருக்கு செய்யும் நன்றி கடன் மீண்டுமாக அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். எமது இயக்கம் சார்பாகவும் எமது இயக்கதோழர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!

No comments:
Post a Comment